4/06/2010

கவுன்சலிங்

மே 3ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மே 3ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். மே 31ம் தேதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஆகும்.

இதனைத்தொடர்ந்து ஜூன் 15ம் தேதி ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டு, ஜூன் 18ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 28ம் தேதியில் இருந்து ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டை விட 15 நாட்கள் முன்பாக கவுன்சிலிங் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment